நான்கோ ஐந்தோ சொற்கள் சேர்த்து ஏதோ எழுதுகின்றேன், அதற்கு பெயர் கவிதையாம். பிடித்திருந்தால்....
&&
ஏதோ என் எண்ணத்தில் தோன்றியவையோடு சேர்ந்து சில யதார்த்தங்களையும் சேர்த்திருக்கிறேன் பிடித்திருந்தால்...
சுவையுங்கள்.
பேசிக் கொண்டு இரு என்கிறேன் - நீ பேசாமல் கொல்கிறாய்... . . பாசத்தை தா என்கிறேன் - நீ பாசாங்கு காட்டுகிறாய்... . . விரல் தொடு என்கிறேன் - நீ விஷத்தைக் கக்குகிறாய்... . . வேஷத்தை கலை என்கிறேன் - நீ வேண்டுமென்றே நடிக்கிறாய்... . . . முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றால் முப்பது அடி தள்ளி நிற்கின்றாய்...