Thursday, September 8, 2011

அம்மா மகன்...


அம்மா மகன்...




ஆயிரம் வார்த்தைக்குள் 
அர்த்தம் உள்ளது 'அம்மா'
அத்தனைக்கும் உயிர் கொடுக்கும்
அபூர்வ பிறவி
வாழ்நாளில் மறக்கமுடியா
ஜீவ நாடி!




கூரை பிரித்து மழை பெய்ய
வானம் பார்த்து வெறுத்தவள் - உடன்
ஊரைவிட்டு வெளியில வந்து
தானம் கேட்டுக் கிடந்தவள்
தனக்காக அல்ல எல்லாம்
மகனுக்காக.




இருட்டுக்குள் தத்தளித்தவனை
வெளிக்குக் கொண்டு வந்தவள் - அந்த
ஒளிமுகம் பார்த்ததிலிருந்து
தென்பட்டது
வெள்ளை மனம்.
கண்பட்டது.




யாருக்கு வாழ்வதில் என்னலாபம்
பூமிக்கும் கால்களுக்குந்தான்
பாரம். - தன்
மகனுக்காக வாழ்நத
ஒரு ஜீவன் 
ஓர்நாள் கனாக்காணுதே!!




"என்வாரிசு மேல வந்துடுவான்";
"எல்லாரையும் மிஞ்சிடுவான்";
அப்பிடியெல்லாம் காணலை,
தனக்கு ஒரு வேளை கஞ்சி போடுவானா???
கணக்கு முடிஞ்சிடுமா???




பெத்த பாவத்திற்கு அந்த
அன்னை கொடுத்தது
பத்துப் பவுண் நகைஅல்ல
தன்னை. - பின்பு
குத்தங்குறை கூறுவதில்
மகனுக்கு என்ன லாபம்,
எல்லாம் விதி!!!

No comments:

Post a Comment