Monday, June 20, 2011

வெளிச்சம் காண...

வெளிச்சம் காண...

இருண்ட பாதைகள்
வழியாய்
பயணிக்கிறேன்,
இன்னும் ஒரு வெளிச்சம்
காணவில்லை.
மின்கம்ப விளக்குகள்
நொருங்கிக் கிடக்கின்றன,
இந்தப் பாதை இன்னும்...

விவரம் தெரியாத
வயதிலிருந்து இன்று வரை
கிடைக்கும்
பரிசு இருள்.
பலதரம் முயன்றும்
முடியவில்லை
வெளிச்சம்
தொலைவிலுள்ள
சந்திரமண்டலமாயிற்றோ...?

அடித்தளங்கள் பல
அழகாய் உருவாக்கியும்
அத்தனையும் ஆட்டங்கண்டது.
மீண்டும் அடித்தளமிட
பீதியுடன் அதர் வெட்டினேன்
இருள் கவிந்திடுமென..

கண்டவர் மயங்கிடும்
வாசனைப் பூவொன்றில்
நானும் மயங்கினேன் - அது
தூரத்தில்:
இரண்டு அடி
எடுப்பதற்குள் - அது
வேறொரு கைக்குள் சென்றது.

இருட்டுக்குள் பிறந்தேன்,
இருட்டுக்குள் வளர்ந்தேன்,
இருட்டுக்குள் வாழ்கிறேன்.
வெளிச்சங்காண
எனக்கும் ஆசை, - ஆனால்
என் கண்களுக்கு தயக்கம்
இருட்டை விட்டுப் பரிய
இஷ்டம் இல்லைப் போல்...

                                          R.J.Prakash.

No comments:

Post a Comment