Sunday, June 19, 2011

கல்

           கல்

கல் என்று யாரோ சொல்ல
என் கற்பனையில் வந்த
பல கற்களைக் கொணர்ந்து
ஒருவடிவம் பெற
சிறு உழியினால்
பொழிந்திருக்கிறேன்.

மங்கையின் அங்கங்களில்
ஆபரணக் கல்
அலங்கார மாளிகையில்
அழகுப் பொருள் கல்
இல்லிடம் கல் - நாம்
பயிலும் சொல்லிடம் கல்
குளக்கட்டுக் கல் - மண்
வளக்கட்டுக்கும் கல்

இத்தனைக்கும் அது ஓர்
சடப்பொருள் - ஆனால்
மனிதனோடு உறவாடும்
உயிர்ப்பொருள்.

இருந்த போதிலும்
மனிதன் குணம்தான்,
கல்லை மிதித்து விட்டு
'கல்லடித்து விட்டது' என்பான்
பாவம் அந்தக் கல்:
அவன் நொருக்க முன்னம்
எப்படி நொருங்கியிருக்குமோ?...
                                                                          R.J.Prakash.

No comments:

Post a Comment