நான்கோ ஐந்தோ சொற்கள் சேர்த்து ஏதோ எழுதுகின்றேன், அதற்கு பெயர் கவிதையாம். பிடித்திருந்தால்....
&&
ஏதோ என் எண்ணத்தில் தோன்றியவையோடு சேர்ந்து சில யதார்த்தங்களையும் சேர்த்திருக்கிறேன் பிடித்திருந்தால்...
சுவையுங்கள்.
நீ என் மீது கோபப்படுவது
நியாயந்தான??
எப்பொழுதும் உன்
நினைவாக இருப்பேன்.
எப்பொழுதும் உன்னை
சுமக்கின்றேன்.
எங்கெல்லாம் உன்னுடன்
வருகின்றேன்.
உன்னை விட்டு ஒருநாள்
பிரிந்ததில்லை.
என்உயிர் உள்ளவரை
உன்னை மறவேன்
தயவு செய்து என்னை
தாக்காதே!
.
.
.
.
.
காலிற்கு செருப்புச்
சொன்னது......