நானாக நானில்லை...
நான்கோ ஐந்தோ சொற்கள் சேர்த்து ஏதோ எழுதுகின்றேன், அதற்கு பெயர் கவிதையாம். பிடித்திருந்தால்.... && ஏதோ என் எண்ணத்தில் தோன்றியவையோடு சேர்ந்து சில யதார்த்தங்களையும் சேர்த்திருக்கிறேன் பிடித்திருந்தால்... சுவையுங்கள்.
Friday, March 22, 2013
Friday, November 23, 2012
.ADVICE.
.ADVICE.
ஒருவரை
'A'ccept – ஏற்றுக்கொள்ளுங்கள்
அவரை
'D'igest – சகித்துக்கொள்ளுங்கள்
அவருக்கு
'V"ouch – உத்தரவாதமளியுங்கள்
அவரிடம்
'I'nterest – அக்கறைகொள்ளுங்கள்
அவரிடத்தில்
'C'areful – கவனமாக இருங்கள்
என்றுமே சந்தோசம்
'E'njoy – அனுபவியுங்கள்.

Friday, April 13, 2012
Wednesday, November 30, 2011
Thursday, September 8, 2011
அம்மா மகன்...
அம்மா மகன்...
ஆயிரம் வார்த்தைக்குள்
அர்த்தம் உள்ளது 'அம்மா'
அத்தனைக்கும் உயிர் கொடுக்கும்
அபூர்வ பிறவி
வாழ்நாளில் மறக்கமுடியா
ஜீவ நாடி!
கூரை பிரித்து மழை பெய்ய
வானம் பார்த்து வெறுத்தவள் - உடன்
ஊரைவிட்டு வெளியில வந்து
தானம் கேட்டுக் கிடந்தவள்
தனக்காக அல்ல எல்லாம்
மகனுக்காக.
இருட்டுக்குள் தத்தளித்தவனை
வெளிக்குக் கொண்டு வந்தவள் - அந்த
ஒளிமுகம் பார்த்ததிலிருந்து
தென்பட்டது
வெள்ளை மனம்.
கண்பட்டது.
யாருக்கு வாழ்வதில் என்னலாபம்
பூமிக்கும் கால்களுக்குந்தான்
பாரம். - தன்
மகனுக்காக வாழ்நத
ஒரு ஜீவன்
ஓர்நாள் கனாக்காணுதே!!
"என்வாரிசு மேல வந்துடுவான்";
"எல்லாரையும் மிஞ்சிடுவான்";
அப்பிடியெல்லாம் காணலை,
தனக்கு ஒரு வேளை கஞ்சி போடுவானா???
கணக்கு முடிஞ்சிடுமா???
பெத்த பாவத்திற்கு அந்த
அன்னை கொடுத்தது
பத்துப் பவுண் நகைஅல்ல
தன்னை. - பின்பு
குத்தங்குறை கூறுவதில்
மகனுக்கு என்ன லாபம்,
எல்லாம் விதி!!!
Monday, September 5, 2011
அனைத்துலக காவல்துறையால் தேடப்படுவோர் பட்டியலில் சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேர்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011, 01:53 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேரை கைது செய்வதற்கு அனைத்துலக காவல்துறைக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பின் தலைவரான குமரன் பத்மநாதனுக்கு எதிராக அனைத்துலக காவல்துறை பிறப்பித்துள்ள பிடியாணை இன்னமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.
அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான் ஆகியோருக்கு எதிராக இந்தியா ஊடாக அனைத்துலக காவல்துறை பிறப்பித்திருந்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் இறந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிபடுத்தியதை அடுத்தே இந்தப் பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்காவைச் சேர்ந்த மொத்தம் 81 பேருக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் 52 பேரைக் கைது செய்வதற்கான உத்தரவை சிறிலங்கா அரசு வழங்கியுள்ளது. ஏனையவர்களை கைது செய்வதற்கான உத்தரவை வேறு நாடுகள் வழங்கியுள்ளன.
இவர்களில் 19 பேரைக் கைது செய்வதற்கு இந்தியா பிடியாணை வழங்கியுள்ளது.
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 81 பேரில் 30 பேர் தீவிரவாதிகள் என்றும், 25பேர் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஏனைய 26பேரும் அச்சுறுத்தல், ஆட்கடத்தல், காயம் ஏற்படுத்தல், போதைப்பொருள் கடத்தல், போன்ற வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
அனைத்துலக காவல்துறையினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 81 பேரில் 5 பேர் பெண்களாவர்.
அவர்களில் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில காதலில் சொன்ன பொய்கள், திருமணத்தின் பின் நடந்தேறும் நிஜங்கள்....

'என் எயிர் நீதானே', ஆனால்.. அந்த உயிருக்காக ஒன்றும் செய்யிறதில்லை.
'ஒரு நிமிஷங்கூட உன்னைப் பிரியமாட்டேன்', ஆனால்.. நாள் கணக்கில் வேலையில் மூழ்கிறது.
'நீ என் வாழ்விலை வரவேணும்', ஆனால்.. 'உன்னை எப்ப சந்திச்சனோ அப்பவே எல்லாம் போச்சு'.
'உன்னை கண்கலங்காமல் பாத்துப்பன்', ஆனால்.. போதையில் வந்து சாட்டை அடி, தலையில் இடி விழுந்தா என்னான்னு இருக்கும்.
'உனக்காக என்னுசிரைத்த தருவன்', ஆனால்.. 'உன்ரை உசிர் வேணும்னா இங்கை இருக்காத அப்பன் வீட்டுக்கு ஓடிடு'.
'உன் கால் கொலுசாகணும்' ஆனால்.. ஒரு வெள்ளி மெட்டி கூட வாங்கிக் கொடுக்கிறதில்லை.
'உன்ரை குரலை நான் எப்பவும் கேக்கணும்', ஆனால்.. யாரவது வந்தால் தலையே காட்டக்கூடாது.
இத்தனைக்கும் ஒன்று மட்டும் நிஜமாகுதையா!!!
'நாம அஞ்சு பிள்ளைகுட்டி பெத்துக்கலாம்', ஆனால்.. அதைவிட கூட பெத்துக்கிறது எல்லாம் எலிக்குஞ்சு அளவிலை.

Subscribe to:
Posts (Atom)