மறுப்பதில்லை..
இமைகள் மறுப்பதில்லை
கண்களை
மூடிக்கொள்வதற்கு,
இதயம் மறுப்பதில்லை
உயிருக்காய்
துடிப்பதற்கு,
இறக்கைகள் மறுப்பதில்லை
இரைக்காய் .
பறப்பதற்கு,
நான்
எந்தநொடியும்
மறுப்பதில்லை - உனை
என்னோடு சேர்ப்பதற்கு..
R.J.Prakash.
நான்கோ ஐந்தோ சொற்கள் சேர்த்து ஏதோ எழுதுகின்றேன், அதற்கு பெயர் கவிதையாம். பிடித்திருந்தால்.... && ஏதோ என் எண்ணத்தில் தோன்றியவையோடு சேர்ந்து சில யதார்த்தங்களையும் சேர்த்திருக்கிறேன் பிடித்திருந்தால்... சுவையுங்கள்.
Thursday, June 23, 2011
Monday, June 20, 2011
வெளிச்சம் காண...
வெளிச்சம் காண...
இருண்ட பாதைகள்
வழியாய்
பயணிக்கிறேன்,
இன்னும் ஒரு வெளிச்சம்
காணவில்லை.
மின்கம்ப விளக்குகள்
நொருங்கிக் கிடக்கின்றன,
இந்தப் பாதை இன்னும்...
விவரம் தெரியாத
வயதிலிருந்து இன்று வரை
கிடைக்கும்
பரிசு இருள்.
பலதரம் முயன்றும்
முடியவில்லை
வெளிச்சம்
தொலைவிலுள்ள
சந்திரமண்டலமாயிற்றோ...?
அடித்தளங்கள் பல
அழகாய் உருவாக்கியும்
அத்தனையும் ஆட்டங்கண்டது.
மீண்டும் அடித்தளமிட
பீதியுடன் அதர் வெட்டினேன்
இருள் கவிந்திடுமென..
கண்டவர் மயங்கிடும்
வாசனைப் பூவொன்றில்
நானும் மயங்கினேன் - அது
தூரத்தில்:
இரண்டு அடி
எடுப்பதற்குள் - அது
வேறொரு கைக்குள் சென்றது.
இருட்டுக்குள் பிறந்தேன்,
இருட்டுக்குள் வளர்ந்தேன்,
இருட்டுக்குள் வாழ்கிறேன்.
வெளிச்சங்காண
எனக்கும் ஆசை, - ஆனால்
என் கண்களுக்கு தயக்கம்
இருட்டை விட்டுப் பரிய
இஷ்டம் இல்லைப் போல்...
வழியாய்

இன்னும் ஒரு வெளிச்சம்
காணவில்லை.
மின்கம்ப விளக்குகள்
நொருங்கிக் கிடக்கின்றன,
இந்தப் பாதை இன்னும்...
விவரம் தெரியாத
வயதிலிருந்து இன்று வரை
கிடைக்கும்
பரிசு இருள்.
பலதரம் முயன்றும்
முடியவில்லை
வெளிச்சம்
தொலைவிலுள்ள
சந்திரமண்டலமாயிற்றோ...?
அடித்தளங்கள் பல
அழகாய் உருவாக்கியும்
அத்தனையும் ஆட்டங்கண்டது.
மீண்டும் அடித்தளமிட
பீதியுடன் அதர் வெட்டினேன்
இருள் கவிந்திடுமென..
கண்டவர் மயங்கிடும்
வாசனைப் பூவொன்றில்
நானும் மயங்கினேன் - அது
தூரத்தில்:
இரண்டு அடி
எடுப்பதற்குள் - அது
வேறொரு கைக்குள் சென்றது.
இருட்டுக்குள் பிறந்தேன்,
இருட்டுக்குள் வளர்ந்தேன்,
இருட்டுக்குள் வாழ்கிறேன்.
வெளிச்சங்காண
எனக்கும் ஆசை, - ஆனால்
என் கண்களுக்கு தயக்கம்
இருட்டை விட்டுப் பரிய
இஷ்டம் இல்லைப் போல்...
R.J.Prakash.
Sunday, June 19, 2011
கல்
கல்
கல் என்று யாரோ சொல்ல
என் கற்பனையில் வந்த
பல கற்களைக் கொணர்ந்து
ஒருவடிவம் பெற
சிறு உழியினால்
பொழிந்திருக்கிறேன்.
மங்கையின் அங்கங்களில்
ஆபரணக் கல்
அலங்கார மாளிகையில்
அழகுப் பொருள் கல்
இல்லிடம் கல் - நாம்
பயிலும் சொல்லிடம் கல்
குளக்கட்டுக் கல் - மண்
வளக்கட்டுக்கும் கல்
இத்தனைக்கும் அது ஓர்
சடப்பொருள் - ஆனால்
மனிதனோடு உறவாடும்
உயிர்ப்பொருள்.
இருந்த போதிலும்
மனிதன் குணம்தான்,
கல்லை மிதித்து விட்டு
'கல்லடித்து விட்டது' என்பான்
பாவம் அந்தக் கல்:
அவன் நொருக்க முன்னம்
எப்படி நொருங்கியிருக்குமோ?...
R.J.Prakash.
எட்டாக்கனி
எட்டாக்கனி
இரு விழியின் ஊடாக
பூமியைப் பார்க்கின்றேன்
தெரியவில்லை - அது
இருட்டாக உள்ளது,
கடிகரத்தின் ஊடாக
காலத்தைப் பற்றுகின்றேன்
கிட்டவில்லை - அது
வேகமாகிறது,
பள்ளியின் ஊடாக
கல்வியைத் தெடர்கின்றேன்
முடியவில்லை - அது
ஓடுகின்றது,
நம்பிக்கையின் ஊடாக
வாழ்வை ஓட்டுகின்றேன்
ஓடவில்லை - அது
நின்றுவிட்டது,
உறவின் ஊடாக
பாசத்தை எதிர்பார்த்தேன்
கிடைக்கவில்லை - அது
எட்டாக்கனியாகிவிட்டது.....
R.J.Prakash
Subscribe to:
Posts (Atom)